Tamil

சமைப்பதே கஷ்டம்

மீனை எவ்வளவுதான் கழுவினாலும், அதன் கவுச்சி வாடை போகவே போகாது என்பது பலரின் புகார். இந்த வாடையாலேயே, மீன் சமைப்பது சிலருக்குப் பெரிய கஷ்டமாக இருக்கும்.

Tamil

குழம்பு மணக்க மணக்க...

இந்த பழைய காலத்து எளிய டிப்ஸ்களைப் பயன்படுத்தினால், மீனின் வழவழப்புத்தன்மையும், கவுச்சி வாடையும் மாயமாகி, குழம்பு மணக்க மணக்க இருக்கும்.

Image credits: Getty
Tamil

சோள மாவு, எலுமிச்சை சாறு

ஒரு கப் சோள மாவுடன், மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, மீன் துண்டுகளில் நன்றாகத் தேய்க்கவும். இது மீனின் வழவழப்பு மற்றும் கெட்ட வாடையை முழுமையாக நீக்கிவிடும்.

Image credits: Getty
Tamil

பால் அல்லது தயிர்

மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கிளாஸ் பால் அல்லது சிறிது தயிர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கவுச்சி வாடை இருக்காது.

Image credits: Getty
Tamil

வினிகர் ட்ரிக்

சில வகை மீன்களில் கவுச்சி வாடை அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில், ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது வினிகர் கலந்து மீனை கழுவினால், வாடை சுத்தமாகப் போய்விடும்.

Image credits: Getty
Tamil

சமைக்கும்போது இதைச் செய்யுங்க!

மீன் குழம்பு செய்யும்போது, கொஞ்சம் அதிகமாக இஞ்சி-பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இது வாடையை நீக்குவதோடு, குழம்பின் சுவையையும் இரண்டு மடங்காக்கும்.

Image credits: Getty

Rice Weevils: அரிசி டப்பாவில் வண்டா? இதோ சிம்பிள் டிப்ஸ்! உடனே ஓடிடும்

சாயங்காலம் கற்பூரம், கிராம்பு ஏத்துங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்கை!

Skincare Tips: இந்த ரகசியம் தெரிஞ்சா மேக்கப்பே தேவையில்லை!

Hemoglobin : வெறும் 7 நாட்களில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி?