வீட்டிற்குள் பொருட்களை கண்டபடி போட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். சுத்தமும் பயன்பாடும் இல்லாத இடங்கள் சிலந்திகளை ஈர்க்கின்றன.
Image credits: Getty
Tamil
வழிகளை அடைக்கலாம்
சிறிய இடைவெளிகள் வழியாக சிலந்தி வீட்டிற்குள் நுழையலாம். ஜன்னல், கதவு போன்ற இடங்களில் விரிசல்கள் இருந்தால் அதை உடனடியாக அடைக்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
நறுமண எண்ணெய்கள்
புதினா, லாவெண்டர் போன்ற நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தியும் இயற்கையாக சிலந்தியை விரட்டலாம். தண்ணீரில் கலந்து சிலந்தி வரும் இடங்களில் தெளிக்கலாம்.
Image credits: Getty
Tamil
வினிகர் பயன்படுத்தலாம்
வினிகரைப் பயன்படுத்தியும் சிலந்தியை விரட்டி வைக்க முடியும். இதை தண்ணீரில் கலந்து சிலந்தி வரும் இடங்களில் தெளித்தால் போதும்.
Image credits: Getty
Tamil
வெளிச்சத்தைக் குறைக்கலாம்
அதிகப்படியான வெளிச்சம் சிலந்திகளை ஈர்க்கிறது. எனவே, வீட்டிற்கு வெளியே அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
Image credits: Getty
Tamil
செடிகளை வளர்க்கலாம்
லாவெண்டர், யூகலிப்டஸ், புதினா, ரோஸ்மேரி போன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பது சிலந்தியை விரட்டி வைக்கும். இவற்றின் வலுவான வாசனை சிலந்திக்கு பிடிக்காது.
Image credits: Getty
Tamil
கவனிக்க வேண்டியவை
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செடிகள் வளர்க்கும்போது சிறப்பு கவனம் தேவை. செடிகள் புதர் போல வளர்வதை தடுக்கலாம். இது சிலந்திகள் ஒளிந்துகொள்ள வசதியாகிறது.