life-style
வாழைப்பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்றாலும் சில வியாபாரிகள் அதனை கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கின்றனர். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல தீமைகள் ஏற்படுகின்றன.
ஆனால் செய்ற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்களின் சுவை குறைவாகவே இருக்கும்.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப் பழத்தின் நிறம் வெளிர் மஞ்சளாக இருக்கும்.
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்களின் அடியில் கருப்பாக இருக்கும். எனவே அவை எளிதில் கெட்டுவிடும்.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. கண்களில் எரிச்சல், குமட்டல், வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.