life-style
கேஸ் அடுப்பை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு முறை கறைபடிந்து விட்டால் அதை துடிப்பதே கடினம். பால், டீ, காபி, பருப்பு பொங்கினால் அப்படியே கறை பிடித்துக் கொள்ளும்.
முதலில் ஒரு கிண்ணத்தில் உப்பு, ஈனோ சேர்த்து கலக்கவும். அதில் சிறிது பாத்திரம் துலக்கும் சோப்பு சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும். பின்னர் கறையில் தேய்த்து துடைத்து எடுக்கவும்.
வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவில் கலந்து கறை இருக்கும் பகுதிகளில் தடவவும். 10-15 நிமிடங்கள் ஊற விடவும், பின்னர் தேய்த்து சுத்தம் செய்யவும்.
எலுமிச்சையை பாதியாக வெட்டி அதன் மேல் உப்பு தூவவும். இந்தக் கலவையை கேஸ் அடுப்பில் படிந்த கறை மீது தேய்க்கவும். இந்தக் கலவை கறையை நன்கு சுத்தம் செய்யும்.
சூடான நீரில் பாத்திரம் துலக்கும் சோப்பு கலவை, உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை கேஸ் அடுப்பில் தடவி ஸ்க்ரப்பர் கொண்டு தேய்க்கவும். பின்னர் துடைத்து எடுக்கவும்.
பேக்கிங் சோடாவில் சிறிது ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து பசை தயார் செய்து கறை மீது தடவவும். 15-20 நிமிடங்கள் ஊற விடவும், பின்னர் ஈரமான துணியால் துடைக்கவும்.
வினிகர் மற்றும் டிடர்ஜென்ட்டை கலந்து கறைபடிந்த இடத்தில் தெளிக்கவும். 10 நிமிடங்கள் ஊற விடவும், பின்னர் தேய்க்கவும். எளிதில் கறை நீங்கும்.