ஆடைகளில் இருந்து மை கறைகளை எளிதாக அகற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
பால்
ஆம், நீங்கள் பால் மூலம் Ink கறைகளை நீக்கலாம். பாலின் ப்ளீச்சிங் பண்புகள் மை கறைகளை நீக்குகின்றன. கறை படிந்த இடத்தை இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து பின்
துவைக்கவும்.
ஆல்கஹால்
மை கறை சிறியதாக இருந்தால், ஒரு சிறிய பஞ்சை ஆல்கஹாலில் நனைத்து கறையின் மீது தேய்க்கவும். கறை பெரியதாக இருந்தால், அதை 15 நிமிடங்கள் ஆல்கஹாலில் ஊற வைத்து துவைக்கவும்.
ஷேவிங் க்ரீம்
ஷேவிங் க்ரீம் மூலமும் மை கறைகளை நீக்கலாம். இதைச் செய்ய, கறையின் மீது ஷேவிங் க்ரீம் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து சோப்பு போட்டு துவைக்கவும்.
Image credits: சமூக ஊடகங்கள்
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையுடன் Ink கறைகளை எளிதாக அகற்றவும்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டில் உள்ள எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் Ink கறைகளை போக்கும் தன்மை கொண்டது. மை கறை மீது டூத் பேஸ்டை தடவி, அது காய்ந்த பிறகு இரண்டு முறை சோப்பு போட்டு துவைக்கவும்.