முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் கூறுகள் வெங்காயச் சாற்றில் உள்ளன. பொடுகை குறைக்கவும் இது உதவும்.
Tamil
செய்முறை
ஒன்று அல்லது இரண்டு வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்யவும். பின்னர் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின்னர் மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்.
Tamil
தலைமுடியில் தடவலாம்
இந்த சாற்றை தலையில் நன்றாக தேய்த்து பூசலாம். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு அலசலாம்.
Tamil
வாரம் இருமுறை
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்தால் முடி உதிர்தல் குறையும், முடி வளரும்.
Tamil
வெங்காயச் சாறு ஹேர் பேக்குகள்
ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு மற்றும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து அலசவும்.
Tamil
வெங்காயச் சாறு+கற்றாழை ஜெல்
வெங்காயச் சாறு, கற்றாழை ஜெல், டீ ட்ரீ ஆயில் கலந்து தலையில் பூசி 15 நிமிடம் கழித்து அலசவும்.
Tamil
வெங்காயச் சாறு+முட்டை வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக்கரு மற்றும் வெங்காயச் சாறு கலந்து தலையில் பூசுவது பொடுகு மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும்.