life-style
பாத்திரத்தில் உள்ள துருவை நீக்க அலுமினிய ஃபாயிலை பயன்படுத்தலாம். தகட்டை ஒரு சிறிய பந்தாக உருட்டி, தண்ணீரில் நனைத்து பாத்திரத்தில் தேய்க்கவும். துரு மறைந்துவிடும்.
அலுமினிய ஃபாயிலை மடித்து ஒரு பந்தாக்கி, சோப்பு நீரில் நனைத்து கண்ணாடியில் தேய்க்கவும். பின் சுத்தமான துணியால் துடைக்கவும்.
மைக்ரோவேவில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்க, அலுமினிய ஃபாயிலை பந்தாக உருவாக்கி சுத்தம் செய்யவும்.
வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது நகைகளை சுத்தம் செய்ய, சூடான நீரில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும். அலுமினிய ஃபாயிலை சேர்த்து வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யவும்.
அலுமினிய ஃபாயிலில் தடிமனான அடுக்கை உருவாக்கவும். அதில் கத்தி மற்றும் கத்தரிக்கோலை சிறிது நேரம் தேய்க்கவும். இது கூர்மையாக்கும்.
துருப்பிடித்த அல்லது கறைகள் உள்ள குழாய்கள் மற்றும் சிங்க்கில் அலுமினிய ஃபாயிலை தேய்க்கவும். புதிய பளபளப்பை தரும்.
அலுமினிய ஃபாயிலை பந்து போல் உசுருட்டி லேசான சோப்பு நீரில் நனைத்து குளிர்சாதனப் பெட்டியின் மூலைகளை சுத்தம் செய்யவும். எண்ணெய் பிசுக்கு நீங்கும்.