பலர் பழங்களை நீண்ட நேரம் பிரஷ்ஷாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். இருப்பினும், சில பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அவற்றை இங்கு பார்ப்போம்.
Tamil
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைக்கக்கூடாது. குளிர்ந்த வெப்பநிலையில் சிட்ரஸ் பழங்கள் அதன் சுவையை இழக்கின்றன.
Tamil
அன்னாசி பழம்
அன்னாசிப்பழம் முழுமையாக பழுக்கும் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. குளிர் அதன் பழுக்க வைக்கும் செயல்முறையை நிறுத்துகிறது. மேலும் இது பழத்தை சுவையற்றதாக மாற்றுகிறது.
Tamil
தக்காளி
தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அவை விரைவில் கெட்டுப்போகாது. ஆனால் குளிர்ச்சியால் தக்காளி அதன் சுவையை இழக்கிறது. தக்காளியை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
Tamil
வாழைப்பழம்
பலர் வாழைப்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். குளிர்ச்சியால் வாழைப்பழம் பழுப்பு நிறமாக மாறும். அதன் சுவையும் மாறுகிறது. அவை மென்மையாகி அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன.