மழைக்காலத்தில் ஃபிரிட்ஜ், சிங்க், அலமாரிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் துர்நாற்றம் அதிகமாக வரும். எனவே இந்த இடங்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்,
வினிகர், பேக்கிங் சோடா
ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் வினிகர், பேக்கிங் சோடா கலவையை தேய்த்து, சிறிது நேரம் கழித்து நன்கு கழுவவும். இது சமையலறையை பளிச்சென்று மாற்றும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை ஒரு சிறிய பாத்திரத்தில் நிரப்பி சமையலறையின் ஒரு மூலையில் வைக்கவும். இது காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சும்.
எலுமிச்சை, உப்பு
எலுமிச்சை சாற்றை உப்புடன் கலந்து சமையலறை மேற்பரப்பில் தேய்க்கவும். இது இயற்கையான முறையில் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியைத் தரும்.
காற்றோட்டம்
சமையலறை கதவை எப்போதும் மூடி வைக்க வேண்டாம். ஜன்னல்கள் மற்றும் ஃபேன் பயன்படுத்தவும். இது போதுமான வெளிச்சத்துடன் புத்துணர்ச்சியை தரும்.
பூக்கள், நறுமண எண்ணெய்
லாவெண்டர், புதினா, துளசி போன்ற பூக்களைப் பயன்படுத்தவும். நறுமண எண்ணெய்களை தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இது துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சி தரும்.