வீட்டில் துருப்பிடித்த பொருட்களை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக எப்படிப் பளபளக்க வைப்பது என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
life-style Aug 28 2026
Author: Raghupati R Image Credits:healthfacts Instagram
Tamil
கத்தரிக்கோல் துருப்பிடித்தால் இப்படி செய்யுங்கள்
உங்கள் கத்தரிக்கோல் துருப்பிடித்திருந்தால், ஒரு வெள்ளை வெங்காயத்தை எடுத்து, அதன் உள்ளே கத்தரிக்கோலை விட்டு மேலும் கீழும் தேயுங்கள். கத்தரிக்கோல் நிமிடத்தில் பளபளப்பாகிவிடும்.
Image credits: healthfacts Instagram
Tamil
தண்ணீர் குழாய் கறையை நீக்க
தண்ணீர் குழாயில் துரு அல்லது உப்புத் தண்ணீர் கறை படிந்திருந்தால், ஒரு எலுமிச்சையை எடுத்து, படத்தில் காட்டியபடி குழாயின் மீது வைத்து நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
Image credits: healthfacts Instagram
Tamil
அயர்ன் பாக்ஸ் கறையாக இருந்தால்
அயர்ன் பாக்ஸ் தீய்ந்துவிட்டாலோ அல்லது துருப்பிடித்தாலோ, பேக்கிங் சோடாவுடன் வினிகர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்யுங்கள்.
Image credits: healthfacts Instagram
Tamil
ஷூ பளபளப்பாக மாற
பேக்கிங் சோடா மற்றும் ஏதாவது ஒரு டூத்பேஸ்ட் இரண்டையும் கலந்து, உங்கள் வெள்ளை ஷூக்களை சுத்தம் செய்தால், அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி ஷூ புத்தம் புதியது போல பளபளக்கும்.