சியா விதைகள் Vs சப்ஜா விதைகள் - கோடைக்கு எது சிறந்தது?
life-style Apr 24 2025
Author: manimegalai a Image Credits:Freepik
Tamil
வேறுபாடு:
சியா விதைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன அவை ஸ்பானிஷ் பேஜ் தாவரத்தின் விதைகள். சப்ஜா விதைகள் துளசி விதைகள் என்பதால் இந்தியாவிலேயே கிடைக்கும்.
Image credits: Freepik
Tamil
ஊற வைக்கும் நேரம்:
சியா விதைகள் ஊற 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும். சப்ஜா விதைகள் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் ஊறி ஜெல் போல் மாறிவிடும்.
Image credits: Freepik
Tamil
சுவை:
சியா விதைகள் லேசான கொட்டை போன்ற சுவையை கொண்டுள்ளது. அதே சமயம் சப்ஜா விதைகளுக்கு சுவை இல்லை. இரண்டுமே ஜெல் தன்மையை கொண்டது.
Image credits: Freepik
Tamil
விதைகளின் அமைப்பு:
சியா விதைகள் கருப்பு நிறம் கொண்டது. சப்ஜா விதைகள் வெளி பழுப்பு நிறத்தில் இருக்கும்.
Image credits: Freepik
Tamil
சத்துக்கள்:
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. சப்ஜா விதைகளில் நார்ச்சத்து இருந்தாலும், ஒமேகா 3 கொழுப்பு குறைவாகவே உள்ளது.
Image credits: Freepik
Tamil
எடை இழப்புக்கு எது சிறந்தது:
சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டிலும் ஆக்சிஜெனெரேற்றம் நிறைந்துள்ளது மற்றும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என கருதப்படுகிறது.
Image credits: Pixels
Tamil
எதில் அதிக நன்மை கிடைக்கும்:
உங்களுக்கு ஒமேகா 3 புரதம் மற்றும் ஆக்சிஜெனேற்றம் வேண்டுமென்றால் சியா விதைகளையும், உடலை குளிர்விக்கவும் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் விரும்பினால் சப்ஜா விதைகளை உட்கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
எந்த பருவத்தில் எதை சாப்பிட வேண்டும்?
சப்ஜா விதைகளை கோடை நாட்களில் உட்கொள்வது நல்லது. ஏனெனில் இது உடலை குளிர்விக்கும். சியா விதைகள் ஒரு சூடான விளைவைக் கொண்டது. எனவே அவற்றை குளிர் காலத்தில் உட்கொள்ள வேண்டும்.