life-style
சிறிதளவு புகையிலையுடன் காபி தூள் கலந்து, அதை உருண்டையாக்கி, அதை பல்லி வரும் இடத்தில் வைத்தால், பல்லி வீட்டிற்குள் வராது.
முட்டை ஓடுகளை சமையலறை ஜன்னல்கள், கதவுகள் போன்ற பள்ளிகள் வரும் இடத்தில் வைத்தால், இந்த வாசனைக்கு வீட்டில் எங்கு பல்லி இருந்தாலும் ஓடிவிடும்.
பல்லிகளுக்கு பூண்டு மற்றும் வெங்காயத்தின் வாசனை பிடிக்காது. எனவே, இவற்றை துண்டுகளாக்கி பல்லிகள் வரும் இடத்தில் வைத்தால், வீட்டிற்குள் ஒரு பல்லி கூட வராது.
பல்லிகளுக்கு மயில் இறகுகள் பிடிக்காது. எனவே, கதவுகள் ஜன்னல்கள் சமய அறையில் மயில் இறகுகளை வைக்கவும்.
பல்லிகளுக்கு கற்பூர வாசனை பிடிக்காது. எனவே, கற்பூரத்தை, எரித்து அதன் புகையை வீட்டில் எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள். இதனால் வீட்டில் இருக்கும் பல்லிகள் ஓடிவிடும்.
மிளகுத்தூளிலிருந்து வரும் கடுமையான வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே, பள்ளிகள் வரும் இடத்தில் இவற்றை வைக்கவும்.
உங்கள் வீட்டில் பல்லிகள் கண்டால் உடனே அவற்றின் மீது ஐஸ் வாட்டர் தெளிவுகள். பல்லி வீட்டில் இருந்து ஓடிவிடும். இனி வரவே வராது.
உங்கள் வீட்டில் பள்ளிகள் வராமல் இருக்க, வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். தூய்மை இல்லாத இடத்தில் பூச்சிகள் வரும். அவற்றை சாப்பிடுவதற்கு பல்லிகள் வரும்.