நீளமான அடர்ந்த கூந்தலுக்கு செலவே இல்லாத மேஜிக் வாட்டர்!
அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு அரிசி நீர் ஒரு சிறந்த வரப்பிரசாதம். இந்த எளிமையான முறையை தலைமுடிக்கு எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
life-style Aug 31 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
முடிக்கு அரிசி தண்ணீர்
சாதம் வடிக்க அரிசியை கழுவும்போது கிடைக்கும் தண்ணீரை நாம் பெரும்பாலும் கீழே ஊற்றிவிடுவோம். ஆனால், அந்தத் தண்ணீர்தான் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
Image credits: Getty
Tamil
எப்படி தயாரிப்பது?
ஒரு கப் அரிசியை நன்றாகக் கழுவி, இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தலாம்.
Image credits: Getty
Tamil
பயன்படுத்தும் முறை
தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாகக் குளிக்கவும். பிறகு, அரிசி தண்ணீரை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
Image credits: Getty
Tamil
வாரத்திற்கு எத்தனை முறை?
அரிசி தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Image credits: Getty
Tamil
முடி ஆரோக்கியம்
சில ஆய்வுகளின்படி, அரிசி தண்ணீர் முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்வதில் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
Image credits: freepik
Tamil
இது ரொம்ப முக்கியம்!
முதல்முறையாக அரிசி தண்ணீரைப் பயன்படுத்தும்போது, பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். அரிப்பு, எரிச்சல் அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.