வீட்டில் சிறிய துளைகள் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எலிகள் துளைகளில் தான் வசிக்கும். எனவே, எங்காவது துளைகள் இருந்தால், அவற்றை மூடுவது சிறந்தது.
Image credits: social media
எலிப்பொறிகள்
வீட்டில் எலிகளை விரட்ட எலிப்பொறிகளைப் பயன்படுத்துங்கள். பொறியில் சீஸ், வேர்க்கடலை வெண்ணெய் அல்லது சாக்லேட் போன்றவற்றை வைத்தால் எளிதில் பிடிபடும்.
Image credits: social media
எலுமிச்சை, மிளகு ஸ்ப்ரே
எலுமிச்சை சாற்றில் மிளகுத்தூள் கலந்து எலிகள் வசிக்கும் இடங்களில் தெளிக்கவும். இதன் வாசனையைத் தாங்க முடியாமல் எலிகள் ஓடிவிடும்.
Image credits: our own
புதினா எண்ணெய்
புதினா எண்ணெயைக் கொண்டு எலிகளை விரட்டலாம். இந்த எண்ணெயின் வாசனை எலிகளுக்குப் பிடிக்காது. பஞ்சில் புதினா எண்ணெயைத் தடவி வீட்டின் மூலைகளிலும், எலிகள் வரும் இடங்களிலும் வைக்கவும்.
Image credits: social media
அல்ட்ராசோனிக் கருவிகள்
அல்ட்ராசோனிக் கருவிகள் எலிகளுக்குத் தொந்தரவூட்டும் ஒலி அலைகளை உருவாக்கும். இதற்கு நீங்கள் வீட்டில் இந்தக் கருவியைப் பொருத்தினால் போதும்.
Image credits: social media
வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்
கரப்பான் பூச்சிகளோ, ஈக்களோ, எலிகளோ வீடு அழுக்காகவும், குப்பையாகவும் இருந்தால்தான் வரும். எனவே, சமையலறை, உணவு சேமிக்கும் அறை, ஆகியவற்றை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருக்கவும்.
Image credits: freepik
போரிக் அமிலம், மாவு
மாவில் போரிக் அமிலத்தைச் சேர்த்து எலிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும். இதனால் அந்தப் பக்கம் எலிகள் வரத் துணியாது.