இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் 7 உலகப் புகழ்பெற்ற பட்டுப் புடவைகள்!
life-style Jun 05 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
காஞ்சிபுரம் பட்டு:
தமிழ்நாட்டின் பெருமையான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், அதன் தடிமனான நெசவு மற்றும் அசல் தங்கச் சரிகை வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றவை. சுபநிகழ்ச்சிகளில் முதன்மையாக உடுத்தப்படுகிறது.
Image credits: Pinterest
Tamil
பனாரசி பட்டு:
வாரணாசியில் தயாராகும் இந்த புடவைகள், முகலாயர் காலத்து கலைநயத்தை நமக்கு நினைவூட்டும். மெல்லிய பட்டில் தங்க மற்றும் வெள்ளி நூல்களால் நெய்யப்படும் இதன் டிசைன்கள் பார்ப்போரைக் கவரும்.
Image credits: Pinterest
Tamil
பைதானி பட்டு:
மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரிய ஆடையான இதில், முந்தானை பகுதியில் நெய்யப்படும் வண்ணமயமான மயில் டிசைன்கள் மிக முக்கிய அம்சமாகும். கைத்தறியின் உச்சக்கட்ட கலை வடிவம் இது.
Image credits: Pinterest
Tamil
மைசூர் சில்க்:
கர்நாடகாவின் மைசூர் பட்டு, அதன் தனித்துவமான மென்மைக்கும், லேசான எடைக்கும் புகழ்பெற்றது. எளிமையும் ஆடம்பரமும் கலந்த ஒரு தோற்றத்தை இது தரும்.
Image credits: Pinterest
Tamil
படோலா பட்டு:
குஜராத் மாநிலத்தின் 'இக்கத்' (Ikat) எனப்படும் இரட்டை நெசவு முறையில் இது உருவாக்கப்படுகிறது. புடவையின் இருபுறமும் ஒரே மாதிரியான டிசைன் மற்றும் வண்ணங்கள் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
Image credits: Pinterest
Tamil
முகா சில்க்:
அசாம் மாநிலத்தின் அரிய பட்டுப்புழுக்களிலிருந்து எடுக்கப்படும் இப்பட்டு, இயற்கையிலேயே பளபளப்பான தங்க நிறமுடையது. இதனைத் துவைக்கத் துவைக்க இதன் பொலிவு மேலும் கூடிக்கொண்டே போகும்.
Image credits: Pinterest
Tamil
சந்தேரி பட்டு:
மத்திய பிரதேசத்தின் சந்தேரி புடவைகள் பட்டு, பருத்தி கலவையால் நெய்யப்படுபவை. இதன் மென்மையும், சிறிய பூ வேலைப்பாடுகளும் கோடைகாலத்திற்கும் ஏற்ற அழகிய தேர்வாகும்.