இளநீர் வாங்கும்போது, அதில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இனி கஷ்டப்பட வேண்டாம். இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணி, நீங்களே சூப்பரான இளநீரைத் தேர்ந்தெடுக்கலாம்.
life-style Mar 28 2026
Author: Rayar r Image Credits:Pixabay
Tamil
ஆட்டிப் பாருங்க
இளநீரை காதுக்கு பக்கத்தில் வைத்து ஆட்டிப் பாருங்கள். உள்ளே தண்ணீர் 'சளக் சளக்' என்று ஆடும் சத்தம் நன்றாகக் கேட்டால், அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
Image credits: Getty
Tamil
எடையை செக் பண்ணுங்க
இளநீரை கையில் தூக்கிப் பாருங்கள். அதன் அளவை விட எடை அதிகமாக இருந்தால், அதில் தண்ணீர் அதிகம் இருக்கிறது. எடை குறைவாக இருந்தால், தண்ணீர் குறைவாகவும், வழுக்கை அதிகமாகவும் இருக்கும்.
Image credits: Getty
Tamil
நிறம் மற்றும் வடிவத்தை கவனியுங்க
பச்சை நிறத்திலும்,முழுமையான வட்ட வடிவத்திலும் இருக்கும் இளநீரைத் தேர்ந்தெடுங்கள். பிரவுன் நிறத்திற்கு மாறிய அல்லது வடிவம் மாறிய காய்களில் தண்ணீர் வற்றி, தேங்காய் அதிகமாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
கறைகள் இருக்கிறதா பாருங்க
இளநீரின் மேல் பகுதியில் கரும்புள்ளிகள் அல்லது வெடிப்புகள் இருந்தால், அந்த மாதிரி காய்களை வாங்க வேண்டாம்.
Image credits: Getty
Tamil
சுவை மற்றும் ஃப்ரெஷ்னஸ்
இளநீர் வாங்கிய பிறகு, அதை அதிக நாட்கள் வைத்திருக்காதீர்கள். வாங்கிய உடனேயே குடித்தால் அதன் சுவையும் ஃப்ரெஷ்னஸும் சூப்பராக இருக்கும்.