Fashion

தீபாவளிக்கு வந்தாச்சு புதிய ஆர்கன்சா லெஹங்கா

நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. உங்களுக்கு ஏத்த ஆர்கன்சா  லெஹங்கா போட்டு அசத்துங்க, கொண்டாடுங்க. 

பிங்க் மலரில் ஆர்கன்சா லெஹங்கா

பெண்களுக்கு பேபி பிங்க் பொருத்தமான நிறம். ஒல்லியாக இருந்தால், இந்த மாதிரியான லைட் பிங்க் மலர் அச்சிட்ட ஆர்கன்சா லெஹங்காவை அணியலாம். இதனுடன் பஃப் ஸ்லீவ்ஸ் பிளவுஸை இணையுங்கள்.

கருப்பு மலரில் லெஹங்கா

கருப்பு மலர் அச்சிட்ட லெஹங்காவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் பெரிய மலர்கள் உள்ளன, இதனுடன் எல்போ ஸ்லீவ்ஸ் பிளவுஸ் போடலாம். 

வெள்ளை மலரில் லெஹங்கா

வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு நிற மலர் வடிவமைப்பு கொண்ட இந்த வகை ஆர்கன்சா லெஹங்காவும் எடுப்பான தோற்றத்தைக் கொடுக்கும், அதில் மெல்லிய லேஸும் உள்ளது.

சிவப்பு மலரில் ஆர்கன்சா லெஹங்கா

சிவப்பு நிறத்தில் முழு ஸ்லீவ்ஸ் பிளவுஸுடன் இந்த வகை சிவப்பு மலர் அச்சிட்ட ஆர்கன்சா லெஹங்காவை அணியலாம். இதனுடன் சிவப்பு நிற நெட் துப்பட்டாவை அணியவும். 

டார்க் நீல ஆர்கன்சா லெஹங்கா

டார்க் நீல நிறத்தில் பெரிய மலர் அச்சிட்ட ஸ்கர்ட், அதே துணியால் ஆன துப்பட்டாவை ஒரு டியூப் ஸ்டைல் அல்லது ஸ்ட்ராப்பி பிளவுஸில் அணிந்து ஸ்டைலான தோற்றத்தைப் பெறலாம்.

லாவெண்டர் ஆர்கன்சா லெஹங்கா

லாவெண்டர் நிறத்தில் மலர் அச்சிட்ட லாவெண்டர் ஸ்கர்ட் மற்றும் பிளவுஸை அணியலாம். இதனுடன் நெட் துணியால் ஆன பூ வேலைப்பாடு கொண்ட துப்பட்டாவை சேர்க்கவும். 

கிளாசிக் ஆர்கன்சா லெஹங்கா

ஆர்கன்சா துணியில் கருப்பு மற்றும் பிங்க் நிறத்தில் சிறிய மலர்கள் கொண்ட மோனோக்ரோம் லெஹங்காவை அணியலாம். அதே துணியால் ஆன பிளவுஸ் மற்றும் துப்பட்டாவை பொருத்தலாம். 

பட்டுப் புடவைகளை வீட்டிலேயே துவைக்க சூப்பர் டிப்ஸ்!!

நிச்சயதார்த்தமா? இதோ அற்புதமான மோதிர டிசைன்ஸ்!!

தொப்பை இருந்தாலும் லெஹங்கா இப்படி உடுத்தலாம் வாங்க!!

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்க... உங்களுக்கான 7 ஸ்டைலிஷ் வாட்ச் இதோ