india

கெத்தாக களமிறங்கிய 'பிரலே' ஏவுகணை; சீனா, பாகிஸ்தான் நடுக்கம்!

முதல் பாலிஸ்டிக் ஏவுகணை

குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா 'பிரலே' ஏவுகணையை முதன்முறையாக காட்சிப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையாகும். 
 

துல்லியமாக தாக்கும் வல்லமை

1,000 கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற பிரலே ஏவுகணை, 400 கிமீ வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது. 

பாதையை மாற்றியமைக்கும் திறன்

எதிரி நாட்டு ஏவுணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட பிரலே, நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன் தனது பாதையை மாற்றியமைக்கும் சிறப்பு திறனை பெற்றுள்ளது. 

 

 

உள்நாட்டு தயாரிப்பு

பிரலே ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மூலம் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 

சீனா, பாகிஸ்தானுக்கு நடுக்கம்

பிரலே ஏவுகணை இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்படுகிறது. இது அந்த நாடுகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாதுகாப்பு படைக்கு வலுசேர்க்கும்

இந்தியாவில் பிரமோஸ் மற்றும் பிரஹார் ஏவுகணைகள் கைவசம் இருக்கும் நிலையில், பிரலே ஏவுகணை இப்போது நமது பாதுகாப்பு படைக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 
 

250 ஏவுகணைகளுக்கு ஆர்டர்

இந்திய விமானப்படை 2022ம் ஆண்டு டிசம்பரில் 120 பிரலே ஏவுகணைகளுக்கு ஆர்டர் செய்தது. 2023ம் ஆண்டு இந்திய ராணுவம் 250 ஏவுகணைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.


 

விவசாயிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் கிசான் 19வது தவணை எப்போது?

டெல்லி தேர்தல்: திடீரென ஒதுங்கிய ராகுல் காந்தி; என்ன காரணம்?

தோனியின் மகள் ஜிவா பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அட! ராஜஸ்தானிலும் தீவுகள் இருக்கா? கோவாவை விட பெஸ்ட்!