india
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த இரண்டு பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் காங்கிரஸ் பிரசாரத்தை ராகுல் காந்திக்கு பதிலாக, பிரியங்கா காந்தி வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் டெல்லி பேரணியில் பங்கேற்க முடியவில்லை என டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்தார்.
ஜனவரி 20ம் தேதி ராகுல் காந்தி டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித்துடன் பிரசாரம் செய்ய இருந்தார். ஆனால் உடல்நலக்குறைவால் முடியவில்லை.
டெல்லியில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் உடல்நலக்குறைவு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தோனியின் மகள் ஜிவா பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
அட! ராஜஸ்தானிலும் தீவுகள் இருக்கா? கோவாவை விட பெஸ்ட்!
HMPV vs. கோவிட்-19: கொரோனாவின் அடுத்த அத்தியாயமா HMPV?
2024 ஆண்டின் சாதனைகள்: UPI முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை!