india

இந்தியாவின் டாப் 10 கொடையாளர்கள்

10- ரோஹிணி நிலேகணி

நன்கொடையாளர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ள ரோஹிணி நிலேகணி 2022-23ம் ஆண்டில் மட்டும் ரூ.170 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். தினமும் சுமார் ரூ.46 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

9- சைரஸ் பூனவாலா

சீரம் இன்ஸ்டிடியூட் தலவர் சைரஸ் பூனவாலா 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.179 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதன்படி, அவர் தினமும் ரூ.49 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

8- நந்தன் நிலேகணி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.189 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது, அவர் தினமும் சுமார் ரூ.51 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

7- அனில் அகர்வால்

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.241 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதன்படி, அவர் தினமும் ரூ.66 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

6- பஜாஜ் குடும்பம்

2022-23 ஆம் ஆண்டில் பஜாஜ் குடும்பத்தினர் ரூ.265 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அதாவது, அவர்கள் தினமும் ரூ.72 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.

5- கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.285 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது, அவரும் தினமும் சுமார் ரூ.78 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

4- குமார் மங்கலம் பிர்லா

பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.287 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது, அவர் தினமும் சுமார் ரூ.78 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

3- முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.376 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது, அவர் தினமும் சுமார் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

2- அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 2022-23ம் ஆண்டில் ரூ.1774 கோடி நன்கொடை அளித்துள்ளார். தினமும் ரூ.4.86 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

1- சிவ் நாடார்

முதல் இடத்தை பிடிப்பவர் HCL டெக்னாலஜி நிறுவனர் சிவ் நாடார் ஆவார். 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2042 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் தினமும் ரூ.5.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

Find Next One