india

பாபா சித்திக்சொத்து மதிப்பு

பாபா சித்திக் யார்?

பாபா சித்திக் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் மற்றும் அஜித் பவாரின் NCPயின் மூத்த தலைவர். பாலிவுட்டில் நல்ல நட்புடன் இருந்தார். அக்டோபர் 12 அன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாபா சித்திக் ஆடம்பர வாழ்க்கை

66 வயதான பாபா சித்திக் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தனது குடும்பத்திற்குப் பெரும் சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார்.

பாபா சித்திக்கின் சொத்து மதிப்பு

2014 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தில் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.76.25 கோடி. இதற்கு மேலும் சொத்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அமலாக்கத்துறை

2018 ஆம் ஆண்டில், அமலாக்கத்துறை சித்திக் மற்றும் பிரமிட் டெவலப்பர்களுடன் தொடர்புடைய 33 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளைப் பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.462 கோடி.

வங்கி வைப்புத்தொகை

தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, பாபா சித்திற்கு ரூ.23.59 கோடி கடன் இருந்தது. அவரது மனைவி, குழந்தைகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.3 கோடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாபா சித்திக் பங்குகளில் முதலீடு

2014 வரை பாபா சித்திக், அவரது மனைவி ஷெஹ்ஜீன் சித்திக் பங்குகளில் ரூ.45 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருந்தனர். அவரது பெயரில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள LIC பாலிசிகளும் இருந்தன.

பாபா சித்திக்கிடம் எவ்வளவு தங்கம்-வெள்ளி?

தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி பாபா சித்திக், அவரது மனைவி, மகளிடம் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் இருந்தன. இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் இருந்தன.

பாபா சித்திக்கின் பங்களா

தேர்தல் அறிக்கையின்படி, பாந்த்ராவில் ரூ.4 கோடியில் வணிகக் கட்டிடம், ரூ.18 கோடியில் இரண்டு வீடுகள், மனைவி பெயரில் ரூ.1.91 கோடி, ரூ.13.73 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருந்தன.

மதுவுக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலம் எது? தமிழ்நாடு எந்த இடத்தில்?

Gandhi Jayanti 2024: மகாத்மா காந்தியின் 10 ஊக்கமளிக்கும் வார்த்தைகள்!

காதல் சின்னம் தாஜ்மஹாலில் சேதங்கள்? ASI சொல்வது என்ன?

ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தேசிய சின்னங்கள்