சமீபத்தில் பெய்த தொடர் மழை, தாஜ்மஹாலின் சுவர்கள், தளங்கள் மற்றும் குவிமாடங்களில் விரிசல்கள் மற்றும் சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்டுகிறது.
குவிமாடத்தில் சேதம்
முக்கிய குவிமாடத்தைச் சுற்றியுள்ள கதவுகளில் குர்ஆனின் வசனங்கள் தேய்ந்து போய்விட்டதாக இந்திய சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ஷகீல் சவுஹான் தெரிவித்தார்.
தாஜ்மஹாலின் பிரச்சனைகள்
பியட்ரா டியூரா தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் சேதமடைந்து விட்டதாகவும், ஷாஜஹான் மசூதிக்கு முன்னால் தரையில் இருந்து கற்கள் உடைந்து விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
ASI கூறியது என்ன?
இருப்பினும், தாஜ்மஹாலில் கடுமையான கட்டமைப்புக்கு எந்த சிக்கலும் இல்லை என இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) கூறியுள்ளது.
பராமரிப்பு பணிகள்
பராமரிப்புக்கான செலவுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுவதாக ASI தெரிவித்துள்ளது.
சுவர்களில் நீர் கசிவு
மழையால் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் ASI தெரிவித்துள்ளது.