இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படுகிறது.
சரியான தூக்கம் இல்லையென்றால் மூளையின் செயல்பாடு குறையும். கவனம் சிதறல், மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அடுத்த நாள் முழுவதும் சோர்வாக இருக்கும். ஆற்றல் அளவு குறையும்.
தூக்கமின்மையால் எரிச்சல் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சளி, காய்ச்சல் போன்றவை எளிதில் வரும்.
தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரத்த அழுத்தம் சமநிலையற்றதாக மாற வாய்ப்புள்ளது.
தூக்கமின்மை அதிக பசியை உண்டாக்கும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும்.
ஆரோக்கியமாக இருக்க, ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.
கற்றாழை ஜூஸ் குடிங்க.. இந்த 7 நன்மைகள் கிடைக்கும்
செரிமானத்தை மேம்படுத்தும் 6 ஆயுர்வேத குறிப்புகள்
இரவில் சாதம் சாப்பிடாமல் தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?
இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க