health
சிலருக்கு இரவில் தாகம் அதிகமாக இருக்கும் என்பதால் இரவில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பார்கள். இரவில் ஏன் அதிக தாகம் ஏற்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
இரவில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. இதனால் இரவில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால், இரவில் அடிக்கடி தாகம் ஏற்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரவில் அடிக்கடி தாகம் ஏற்படுவது பல நோய்களின் அறிகுறியாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரவில் தாகம் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
இதனால் உடலில் நீர் அளவு குறைகிறது. உங்கள் உடல் வழக்கத்தை விட அதிக திரவத்தை இழக்கும்போது, நீங்கள் மீண்டும் மீண்டும் தாகத்தை உணர்கிறீர்கள்.
இரத்த சோகை பிரச்னையால், உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் குறையும். இது சோர்வு மற்றும் சோம்பல் ஆகியவற்றுடன் இரவில் அதிக தாகத்தை ஏற்படுத்துகிறது.
பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான தாதுக்கள் நம் உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
தாதுக்கள் நம் உடலில் திரவ சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தாதுக்கள் குறைவதால் இரவில் கடுமையான தாகம் ஏற்படுகிறது.