தினமும் 2,200க்கு கூடுதலாக நடக்கும் ஒவ்வொரு அடியிலும் இதய நோய், இறப்புக்கான ஆபத்து குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆய்வுகள், தினமும் 2,200 அடிகள் நடப்பது இதய நோய் ஆபத்தை குறைப்பதாக கூறுகிறது.
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கின்றன.
தினமும் 9,000 முதல் 10,500 அடிகள் வரை நடப்பவர்களுக்கு கூடுதலான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மற்ற உடற்பயிற்களை போல அல்லாமல் நடைபயிற்சி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற மிதமான பயிற்சியாகும்.
நடப்பதன் நன்மைகளை அதிகரிக்க, நீங்கள் அமரும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர் எனில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 5 முதல் 10 நிமிடங்கள் நடக்கலாம்.
வாக்கிங் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கும்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் நடக்கலாம்.
தசைகள், எலும்புகள் வலுப் பெற தினமும் நடப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அம்பானி மனைவியோட கூந்தல் அழகுக்கு இதான் காரணமா?
ஒரு பைசா செலவில்லாமல் கழுத்து கருமையை நீக்கும் டிப்ஸ்
எடை குறைய தண்ணீரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க..!
காலையா, மதியமா? எப்போது தர்பூசணியை சாப்பிட்டால் ரொம்ப நல்லது?