சாப்பிட்ட பிறகு சில விதைகளை மென்று சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கேஸ், அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் மதிய உணவுக்குப் பிறகு பலரையும் தொந்தரவு செய்கின்றன.
செரிமான பிரச்சனைகள் பொதுவானவை என்றாலும், மதிய உணவுக்குப் பிறகு நிவாரணம் அளிக்க உதவும் சில இயற்கை தீர்வுகள் உள்ளன.
மதிய உணவுக்குப் பிறகு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய சோம்பு, ஓமம் மற்றும் சீரகம் மிகவும் நல்லது. இவற்றை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
சாப்பாட்டிற்குப் பிறகு சோம்பு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார் இரைப்பைக் குடலியல் மூத்த ஆலோசகர் டாக்டர் சுபம் வாத்ஸ்யா.
சோம்பு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சாப்பிடுவது, உணவுக்குப் பிறகு ஏற்படும் கேஸ் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த ஓமம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Body Heat: கோடையில் உடல் சூட்டை குறைக்கும் சூப்பர் பானங்கள்!
தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்க... உடல்ல இந்த 7 மாற்றங்கள் நடக்கும்
Weight Loss: உடல் எடையை குறைக்கணுமா.. நார்ச்சத்து நிறைந்த 6 உணவுகள் இதோ!
Protein Foods: புரோட்டீன் ரிச் உணவுகள்! சைவ பிரியர்களுக்கான லிஸ்ட்!