100 கிராம் சியா விதைகளில் சுமார் 17 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் நார்ச்சத்துகளும் அதிகம். இதய ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் வலிமைக்கும் சியா விதைகள் மிகவும் நல்லது.
Image credits: Getty
Tamil
பூசணி விதைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பூசணி விதை உதவுகின்றன. இதில் மெக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து, நல்ல கொழுப்புகள் உள்ளன. 100 கிராம் விதையில் 19 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
Image credits: Getty
Tamil
ஆளி விதைகள்
100 கிராம் ஆளி விதைகளில் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. இது தவிர, உடலின் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் (anti-inflammatory) இதில் உள்ளன.
Image credits: Getty
Tamil
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. 100 கிராம் சூரியகாந்தி விதைகளில் 21 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
Image credits: Getty
Tamil
எள் விதைகள்
100 கிராம் எள்ளில் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும், இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளன.
Image credits: Getty
Tamil
கினோவா விதைகள்
100 கிராம் கினோவாவில் 14 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.
Image credits: Getty
Tamil
கவனத்திற்கு...
உங்கள் உணவு முறையில் எந்த மாற்றத்தைச் செய்வதாக இருந்தாலும், அதற்கு முன் மருத்துவ நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.