சமீபகாலமாக வெயில் அதிகமாகி வருகிறது. இதனால், பலரும் உடல் சூடு (பாடி ஹீட்) பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.
உடல் சூட்டைக் குறைக்க உங்கள் வீட்டிலேயே சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சைலியம் உமியை பால் அல்லது தண்ணீரில் கலந்து, அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். இது உடல் சூட்டை குறைக்க உதவும்.
சப்ஜா விதைகள் உடல் சூட்டைக் குறைக்க பெரிதும் உதவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் இந்த விதைகளைப் போட்டு, அரை மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.
பாதாம் பிசினை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். இது தண்ணீரில் கரைந்து ஜெல்லி போல மாறும்.
பாசிப்பயறை ஊற வைவைத்து மிக்ஸியில் அரைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம். அல்லது வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம்.
3 முதல் 4 கப் தண்ணீரில் பார்லி விதைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரை அடிக்கடி அருந்தி வர உடல் சூடு குறையும்.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்க... உடல்ல இந்த 7 மாற்றங்கள் நடக்கும்
Weight Loss: உடல் எடையை குறைக்கணுமா.. நார்ச்சத்து நிறைந்த 6 உணவுகள் இதோ!
Protein Foods: புரோட்டீன் ரிச் உணவுகள்! சைவ பிரியர்களுக்கான லிஸ்ட்!
Weight Loss Foods: உடல் எடையை குறைக்க உதவும் 6 உணவுகள்.!