மொபைல் போன் பயன்பாடு மூளையின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. 'பிரெயின் ராட்' எனப்படும் மூளைச் சோர்வு பாதிப்பைத் தடுக்க இந்த விஷயங்களை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
health Jul 11 2026
Author: Rayar r Image Credits:Getty
Tamil
வாசிப்புப் பழக்கம்
வாசிப்புப் பழக்கம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் புத்தகங்கள், செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகைகள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
Image credits: Getty
Tamil
மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகள்
புதிர்கள், குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றவை மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
சமூக உறவுகளைப் பேணுங்கள்
நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவருடனும் நல்ல உறவைப் பேணி, அவர்களுடன் நேரம் செலவிடுவது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Image credits: Getty
Tamil
நல்ல தூக்கம் அவசியம்
நல்ல தூக்கம் கிடைத்தால்தான் மூளையால் சரியாகச் செயல்பட முடியும். தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
சத்தான உணவுகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
Image credits: Getty
Tamil
தினசரி உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வது, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.