சப்பாத்தி மாவில் தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு முன், ஒரு அவகாடோ பழத்தின் தோலையும், கொட்டையையும் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
Image credits: freepik
Tamil
உப்பு, நெய் சேர்த்து பிசையவும்
தேவையான அளவு உப்பு, சிறிது நெய் சேர்த்து மாவை நன்கு கலக்கவும். பிறகு, மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, சப்பாத்தியாகத் தேய்க்கவும். வழக்கம் போல சப்பாத்தியை சுட்டு எடுக்கலாம்.
Image credits: Getty
Tamil
மாவு பிசையும்போது கொஞ்சம் நெய்
சப்பாத்தி மாவு பிசையும்போது, அதில் சிறிது நெய் சேர்ப்பது சப்பாத்தியை சாஃப்ட்டாக மாற்ற உதவும். இது மாவை இன்னும் மென்மையாக்கும்.
Image credits: Getty
Tamil
தயிர் சேர்த்து மாவு பிசையலாம்
கோதுமை மாவில் தயிர் சேர்த்தும் சப்பாத்திக்கு மாவு பிசையலாம். பிசைந்த மாவை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்த பிறகு பயன்படுத்தினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
சூடான நீரைப் பயன்படுத்துங்க
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சாதாரண தண்ணீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். இதுவும் சப்பாத்தியை சாஃப்ட்டாக்க உதவும்.
Image credits: Pixabay
Tamil
தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல ஆப்ஷன்
உங்கள் வீட்டில் நெய் அல்லது தயிர் இல்லையென்றால், சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவை பிசையலாம். இதுவும் சப்பாத்தியை மிகவும் சாஃப்ட்டாக மாற்றும்.