Tamil

குக்கரில் லெமன் ஊறுகாய்

குக்கரில் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி? மிக எளிதாகச் செய்ய தேவையான ஸ்டெப் பை ஸ்டெப் டிப்ஸ் இதோ!

Tamil

எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்

முதலில் ஒரு பாத்திரத்தில் 12 எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 250 கிராம் பச்சை மிளகாய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Image credits: Chefs mandala
Tamil

ஊறவைத்த புளி

இந்தக் கலவையை நன்றாகக் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் வையுங்கள். பிறகு, சிறிதளவு வெந்நீரில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

Image credits: Chat gpt
Tamil

பேனில் தாளிப்பு மசாலா

அடுத்து, ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு உரலில் போட்டு இடித்துப் பொடி செய்துகொள்ளுங்கள்.

Image credits: Chatgpt Or AI
Tamil

எலுமிச்சை பழத்தின் விதைகள்

வேகவைத்த எலுமிச்சையை இரண்டாக வெட்டி, விதைகளை நீக்கிவிடுங்கள். பிறகு, மிக்ஸியில் வேகவைத்த பச்சை மிளகாய் மற்றும் புளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

Image credits: Getty
Tamil

பூண்டு தாளிப்பு

தாளிப்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, ஒரு முழு பூண்டின் பற்களைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Image credits: Getty
Tamil

இறுதியாக குக்கரில்...

குக்கரில் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாகக் கலக்குங்கள். சுவையான ஊறுகாய் ரெடி! பாட்டிலில் சேமித்துப் பயன்படுத்துங்கள்.

Image credits: Getty

செரிமானம் முதல் உடல் எடை வரை.. ஓமம் வாட்டரின் 7 முக்கிய நன்மைகள்!

Gut Health: வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க 5 காலை பானங்கள்!

Oil-Free Poori : பூரி சுட தண்ணி போதும்! எண்ணெய் வேண்டாம்! சத்தான பூரி ரெசிபி!

Strawberry Benefits: ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!