காலையில் செய்த இட்லி மீந்துவிட்டால், அதை வைத்து மாலையில் ஒரு சூப்பரான, காரசாரமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
health-food Sep 07 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Gemini AI
Tamil
கொஞ்சம் உப்பு, காரம், மசாலா... ஸ்பைஸி இட்லி ரெடி!
சாதாரணமாக இருக்கும் பழைய இட்லியில், கொஞ்சம் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, ஒரு அட்டகாசமான மாலை நேர சிற்றுண்டியாக மாற்றலாம்.
Image credits: Gemini
Tamil
மசாலா இட்லி செய்யத் தேவையான பொருட்கள்
தேவையானவை: இட்லி 4, மிளகாய்த்தூள், கரம் மசாலா, சீரகம்-கடுகு தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு 5, எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப.
Image credits: Gemini
Tamil
மசாலா இட்லி செய்முறை
முதலில், மீதமுள்ள இட்லிகளை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு இட்லியை 4 முதல் 6 துண்டுகளாக வெட்டலாம்.
Image credits: Google
Tamil
தாளிக்கும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் தட்டிய பூண்டு சேர்த்துத் தாளிக்கவும்.
Image credits: Google
Tamil
மசாலாவுடன் இட்லியைச் சேர்க்கவும்
பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கடைசியாக, வெட்டி வைத்திருக்கும் இட்லித் துண்டுகளை இதில் சேர்க்கவும்.
Image credits: Pinterest
Tamil
மேகி மசாலா சேர்க்கலாம்!
இப்போது மீண்டும் அடுப்பை ஆன் செய்து, இட்லியை நன்றாக சூடுபடுத்தவும். குழந்தைகள் விரும்பினால், கடைசியாக மேகி மசாலா அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். இது கூடுதல் சுவை தரும்.