குழம்புல உப்பு அதிகமாயிடுச்சா? இப்படி பண்ணா டேஸ்ட் ஆயிடும்!
சமைக்கும்போது குழம்பில் உப்பு அதிகமாகிவிடுவது ஒரு பொதுவான தவறுதான். இதை எளிதாகச் சரிசெய்யலாம்.
health-food Sep 07 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Getty
Tamil
குழம்பில் உப்பு அதிகமானால்?
நிறைய பேர் அவசரமா சமைக்கும்போது அல்லது வேலையை முடிக்கிற அவசரத்துல, தெரியாமலேயே குழம்புல உப்பை அள்ளிப் போட்டுடுவாங்க.
Image credits: Pinterest
Tamil
உப்பு கூடினால் கவலை வேண்டாம்
எந்த குழம்புல உப்பு அதிகமானாலும், அதை சாப்பிடுவது ரொம்பவே கஷ்டம். ஆனா, இந்த மாதிரி சமயத்துல உப்பைக் குறைக்க சில வழிகள் இருக்கு. அது என்னென்னனு பார்க்கலாம் வாங்க.
Image credits: Pinterest
Tamil
கோதுமை மாவு உருண்டைகள்
குழம்புல உப்பு அதிகமாயிடுச்சினா, கோதுமை மாவை சின்ன சின்ன உருண்டைகளா பிடிச்சு குழம்புல போடுங்க. அது குழம்புல இருக்குற அதிகப்படியான உப்பை உறிஞ்சிடும்.
Image credits: Pinterest
Tamil
எலுமிச்சை சாறு
குழம்புல உப்பு கூடிட்டா, அதுல கொஞ்சம் எலுமிச்சை சாறு கலப்பது ஒரு சுலபமான வழி. இது உப்பின் அளவை சமன்படுத்த உதவும்.
Image credits: Pinterest
Tamil
தயிர் அல்லது ஃப்ரெஷ் க்ரீம்
குழம்புல உப்பு அதிகமா இருக்குனு தோணுச்சுனா, அதுல கொஞ்சம் தயிர் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் சேருங்க. இதுவும் உப்பின் அளவைக் குறைக்க நல்லா வேலை செய்யும்.
Image credits: Pinterest
Tamil
வெங்காயம், தக்காளி துண்டுகள்
இதுமட்டுமில்லாம, வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை குழம்புல போட்டும் உப்பைக் குறைக்கலாம். இந்த முறை அற்புதமா வேலை செய்யும்னு நிபுணர்கள் சொல்றாங்க.