சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாகவும் தேனைப் பலரும் பார்க்கிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க தேன் சாப்பிடுகிறார்கள். உண்மையிலேயே தேன் சாப்பிட்டால் எடை குறையுமா? வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்தும்போது, அது உடல் எடையைக் குறைக்க உதவும்.
தேன், அதிகமாகப் பசி எடுப்பதைத் தடுக்கும். தினமும் 1-2 டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் அல்லது எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடிப்பது, செரிமானத்தை மேம்படுத்தும்.
தேன் உடல் எடை, அடிபோசிட்டி (Adiposity - கொழுப்பு), மற்றும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) ஆகியவற்றைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் சுமார் 64 கலோரிகள் உள்ளன. அதனால், இதை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு உணவுக்குப் பிறகோ சாப்பிடுவது மிகவும் நல்லது.
தேனை சூடான அல்லது கொதிக்கும் நீரில் சேர்க்கக் கூடாது. வெதுவெதுப்பான நீர், எலுமிச்சைச் சாறு அல்லது இஞ்சிச் சாறுடன் கலந்து பயன்படுத்துவதுதான் சிறந்தது.
சர்க்கரை நோயாளிகள் தேனைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.
தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல் வராமல் தடுக்க உதவுகிறது.
தேனை எலுமிச்சைச் சாறுடன் கலந்து சாப்பிடுவது தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
தேன், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் கொடுக்கும். மேலும், சருமத்திற்கு ஈரப்பதத்தையும் பளபளப்பையும் கொடுக்க தேன் உதவுகிறது.