Tamil

கல்லீரலை பாதிக்கும் 6 உணவுகள்

உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

மது அருந்துதல்

மது அருந்தும்போது, அது கல்லீரல் செல்களை நேரடியாக சேதப்படுத்துகிறது. நாளடைவில் இது சிரோசிஸ் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

சோடா, மிட்டாய், பேக்கரி உணவுகள்

சோடா, மிட்டாய்கள், பேக்கரி பொருட்களில் அதிக சர்க்கரை மற்றும் பிரக்டோஸ் உள்ளது. இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிறது.

Image credits: Getty
Tamil

பிரெஞ்ச் ஃபிரைஸ், பர்கர்கள்

பிரெஞ்ச் ஃபிரைஸ், பர்கர் போன்ற எண்ணெய் நிறைந்த உணவுகளில் சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம். இவை கல்லீரலில் கொழுப்பு படிய வழிவகுத்து பிரச்சினைக்கு காரணமாகின்றன.

Image credits: Getty
Tamil

வெள்ளை பிரெட், பேஸ்ட்ரிகள்

வெள்ளை பிரெட், பேஸ்ட்ரிகள் போன்றவற்றில் நார்ச்சத்து இருப்பதில்லை. இவை ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்கின்றன.

Image credits: social media
Tamil

அதிக உப்புள்ள உணவுகள்

அதிகப்படியான உப்பு, உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கல்லீரலுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து அதன் செயல்பாட்டை பாதிக்கிறது.

Image credits: Getty
Tamil

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

மாட்டிறைச்சி, சாசேஜ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால், ஜீரணிக்க கடினமாக இருக்கும்.  இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் கல்லீரலுக்கு நல்லதல்ல.

Image credits: Getty

Eye Health: கண் பார்வையை ஷார்ப்பாக்கும் 6 உணவுகள்!

Papaya Benefits : தினமும் பப்பாளி சாப்பிட்டா உடலில் நடக்கும் அதிசயம்!

Orange Juice : ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் இந்த 5 நோய்கள் கிட்ட கூட வராது!

வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!