சுவையான அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 6 முக்கிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
health-food Aug 30 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அன்னாசி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதில் உள்ள 'புரோமெலைன்' என்ற என்சைம், செரிமானத்திற்கு உதவும்.
Image credits: Getty
Tamil
செரிமானத்தை மேம்படுத்தும்
அன்னாசி பழத்தில் உள்ள 'புரோமெலைன்' என்சைம், புரதங்களை உடைக்க உதவுகிறது. இதனால், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் குறைகின்றன.
Image credits: Getty
Tamil
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க இது துணைபுரிகிறது.
Image credits: Getty
Tamil
உடல் எடையைக் குறைக்க உதவும்
அன்னாசி பழத்தில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து அதிகம். இதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், உடல் எடையைக் குறைக்க இது உதவுகிறது.
Image credits: Getty
Tamil
மாதவிடாய் வலியை குறைக்கும்
அன்னாசி பழம் சாப்பிடுவது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் உடலில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உதவும் என கூறப்படுகிறது.
Image credits: Getty
Tamil
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் 'புரோமெலைன்' என்சைம் உள்ளது. இவை இரண்டுமே சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.