Tamil

முடி வலுவாக வளர சாப்பிட வேண்டிய 8 உணவுகள்

முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர உதவும் 8 சூப்பர் உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

முட்டை

முட்டையில் புரோட்டீன், பயோட்டின், செலினியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவோடு இரண்டு அவித்த முட்டைகளைச் சாப்பிடுவது முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

கருவேப்பிலை

கருவேப்பிலையில் இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா-கரோட்டின் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை முடி வேர்களுக்கு ஆக்சிஜன் சென்றடைவதற்கும் மறைமுகமாக உதவுகிறது. 

Image credits: Getty
Tamil

கீரை

கீரைகளில் உள்ள வைட்டமின் C,  முடிகளில் வேர்களைச் சுற்றி கொலாஜன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலாஜன் தோல் மற்றும் அதன் திசுக்களின் கட்டமைப்புக்கு தேவையான புரதமாகும். 

Image credits: Getty
Tamil

நெல்லிக்காய்

நெல்லிக்காய் வைட்டமின் C நிறைந்த உணவாகும். வைட்டமின் C போதுமான அளவில் கிடைப்பது உடலின் ஊட்டச்சத்து நிலையை ஆதரிப்பதால், தலைமுடியின் இயல்பான வளர்ச்சிக்கும் மறைமுகமாக பயனளிக்கலாம். .

Image credits: Getty
Tamil

பீனட் பட்டர்

பீனட் பட்டரில் புரதம், வைட்டமின் E  என முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை தலைமுடியின் முக்கிய கட்டமைப்பு புரதமான கெரட்டின் உருவாக்கத்திற்கு தேவையானது. 

Image credits: Freepik
Tamil

எள்

எள்ளில் இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது முடியின் வளர்ச்சியை வேகப்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

தயிர்

தயிரில் புரோட்டீன், வைட்டமின் பி5 மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி5, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது உச்சந்தலைக்குத் தேவையான இயற்கையான எண்ணெயை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் முடி வறண்டு போவதையும், உடைவதையும் தடுக்கலாம்.

Image credits: Getty

Ghee Side Effects: தினமும் நெய் சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஜாக்கிரதை!

Rice Water Hair Hack: அரிசி கழுவிய நீரை தூக்கி ஊத்தாதீங்க! முடி அடர்த்தியாக வளர இப்படி பயன்படுத்துங்க

Skin Care: சூடான நீரா, குளிர்ச்சியான நீரா? சருமத்திற்கு எது பெஸ்ட்?

Glowing Skin: இயற்கையான முகப்பொலிவுக்கு உதவும் 8 DIY ஃபேஸ் மாஸ்க்