பட்டுப் போன்ற கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய்ப் பால்: 5 எளிய வழிகள்!
health-beauty May 27 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
இயற்கை கண்டிஷனர்:
தேங்காய்ப் பாலை வெதுவெதுப்பாக்கி தலைமுடி, வேர்களில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பின் மைல்ட் ஷாம்பூவால் அலசினால் முடி வறட்சி நீங்கி மென்மையாகும்.
Image credits: Pinterest
Tamil
தேங்காய்ப் பால் மற்றும் எலுமிச்சை சாறு பேக்:
தேங்காய்ப்பால் 4 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தடவி 45-50 நிமிடம் ஊறவைத்து, ஷாம்புவால் கழுவினால் கூந்தல் அடர்த்தியாகி பொடுகு நீங்கும்.
Image credits: Pinterest
Tamil
கற்றாழை மற்றும் துளசி கலவை:
துளசி, கற்றாழை ஜெல்லுடன் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்து ஊறவைத்து அலசவும். இது கூந்தல் வேர்களை வலுவாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து நல்ல பலன் தரும்.
Image credits: Pinterest
Tamil
தேன் மற்றும் தேங்காய்ப் பால் பேக்:
வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அரை கப் தேங்காய்பாலுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முடிக்கு ஈரப்பதம் கிடைத்து மென்மையாகும்.
Image credits: Pinterest
Tamil
தயிர் மற்றும் தேங்காய்ப் பால் மாய்ஸ்சரைசர்:
5 ஸ்பூன் தேங்காய்ப்பால், 1 ஸ்பூன் தயிர் கலந்து, முடி முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். இதிலுள்ள புரதங்கள் சேதமடைந்த கூந்தலை சரிசெய்து, உடனடியாக பட்டுப்போல் மென்மையாக்கும்.