Tamil

இனி சோப்புக்கு பதில் இந்த 3 பொருள் போதும்; முகம் பளபளக்கும்!!

Tamil

தயிர்

தயிர் சருமத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் பண்புகள் முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் மற்றும் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

Image credits: social media
Tamil

தயிரை எப்படி பயன்படுத்தலாம்?

சிறிதளவு தயிருடன் ஒரு சிட்டிகை மஞ்சள், கடலை மாவு கலந்து தினமும் தடவவும். இந்த கலவையானது சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும்.

Image credits: social media
Tamil

பச்சை பால்

முக வறட்சியை தடுக்க பச்சை பாலுடன் கடலை மாவு கலந்து பயன்படுத்துங்கள். இவை முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் மற்றும் வறட்சியை போக்கும்.

Image credits: pexels
Tamil

பச்சைப்பால் மற்றும் மஞ்சள்

பச்சை பால் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி என்பதால் இது முகத்தை மென்மையாக்கும். பச்சை பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து தடவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும்.

Image credits: pexels
Tamil

கடலை மாவு

தினமும் முகத்திற்கு சோப்பு போடுவதற்கு பதிலாக கடலை மாவுடன் ரோஸ் வாட்டர், தயிர் அல்லது பால் கலந்து பயன்படுத்துவது நல்லது.

Image credits: pinterest
Tamil

கடலை மாவு மற்றும் மஞ்சள்

கடலை மாவுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு பளபளப்பை வழங்கும்.

Image credits: pinterest
Tamil

குறிப்பு

பச்சை பால், தயிர், கடலை மாவு இயற்கையான பொருட்கள் என்றாலும், ஒவ்வொருவரின் சருமம் வேறுபட்டது என்பதால் அவற்றை பயன்படுத்தும் முன் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Image credits: PINTEREST

கொத்து கொத்தா முடி உதிர இந்த பழக்கங்கள் தான் காரணம்; உடனே நிறுத்துங்க

முகத்தில் இருக்கும் சுருக்கங்களைப் நீக்கும் 5 பெஸ்ட் ஆயில்கள்!!

மஸ்காரா யூஸ் பண்றீங்களா? அப்ப முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!

எலுமிச்சைத் தோலை உள்ளங்காலில் தேய்த்தால் கிடைக்கும் அற்புத நன்மைகள்