cinema
பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய படம் சாவா தான். இப்படம் 657 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் 122 கோடி வசூல் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3வது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் உள்ளது. இப்படம் ரூ.96 கோடி வசூலித்து இருந்தது.
நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்சேல் 79 கோடி வசூல் உடன் நான்காம் இடத்தில் உள்ளது.
இந்தியில் பிப்ரவரி மாதம் ரீ-ரிலீஸ் ஆன சனம் தேறி கசம் திரைப்படம் ரூ.40 கோடி வசூல் உடன் 5ம் இடத்தில் உள்ளது.
ஆபீஸர் ஆன் டியூட்டி என்கிற மலையாள படம் 39 கோடி வசூல் உடன் 6-ம் இடத்தில் உள்ளது.
ரீ-ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான இண்டர்ஸ்டெல்லார் ரூ.28 கோடி வசூல் உடன் 7ம் இடத்தில் உள்ளது.
8ம் இடத்தில் உள்ள கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்டு படம் ரூ.27 கோடி வசூலித்துள்ளது.
Crazxy திரைப்படம் 19 கோடி வசூல் உடன் 9வது இடத்தில் உள்ளது.
சந்தீப் கிஷான் நடித்த Mazaka திரைப்படம் ரூ.12 கோடி வசூல் உடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது.