cinema
மே 25, 1977 அன்று புகழ்பெற்ற தமிழ் நடிகர் சிவகுமாருக்கும் லட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார் கார்த்தி.
அவரது அண்ணன் சூர்யாவும் டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி தேசிய விருதும் வென்று அசத்தி இருக்கிறார்.
சூர்யாவும் கார்த்தியும் இணைந்து முழுநீள படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ஒரு இயக்குநராக விரும்பிய மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகரானார்.
கார்த்தியின் சொத்து மதிப்பு ரூ. 97 கோடி இருக்குமாம். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் கார்த்தி இருக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவன், பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி.போன்ற படங்கள் கார்த்திக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தன.
கார்த்தி நடிப்பில் அடுத்ததாக மெய்யழகன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.