cinema
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக மாறிய நடிகர் சிவகார்த்திகேயன்.
முதல் படத்திற்கு, ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வாங்கிய சிவகார்த்திகேயனின் இன்றைய சம்பளம் ரூ.30 முதல் 40 கோடி.
மிக குறுகிய காலத்தில் கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரம் என்கிற இடத்தை பிடித்துள்ளார்.
தன்னை மிஸ்டர் பர்ஃபெக்ட் என வெளிப்படுத்தி கொண்டாலும், இவரை சுற்றும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை.
சமீபத்தில் சிவகார்த்திகேயன், நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ரூ.400 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய 25-ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாகவும் - அதர்வா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் இளம் பெண் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.