cinema
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பாதுகாவலர்கள்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலராக இருக்கும் ஷெரா, சல்மான் கானின் நிழலாகவே கருதப்படுகிறார். அவரின் மாதச் சம்பளம் ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கானின் தனிப் பாதுகாவலாரக இருப்பவர் ரவி சிங். அவர் ஒரு ஆண்டுக்கு ரூ.2.7 கோடி சம்பாதிக்கிறார்.
மும்பை காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஜித்தேந்திர ஷிண்டே. அமிதாப்பின் பாதுகாவலாராக பணியாற்றியவர். அவர் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
அக்ஷ்ய் குமார் எப்போது வெளியே சென்றாலும் அவருடன் ஷெர்சாயி தெலேவை பார்க்க முடியும். அக்ஷய் குமார் தனது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்குகிறாராம்
தனது தனி பாதுகாவலரான யுவ்ராஜ் உடன் தான் ஆமீர் கான் வெளியே செல்வார். யுவராஜின் ஆண்டுச் சம்பளம் ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது
தீபிகா படுகோனின் பாதுகாவலராக பல ஆண்டுகளாக ஜலால் பணிபுரிந்து வருகிறார். ஜலால் சுமார் ரூ.1.2 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.
அனுஷ்கா ஷர்மாவுக்கு மட்டுமின்றி அவரின் கணவர் விராத் கோலி மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கும் பிரகாஷ் பாதுகாப்பு வழங்குகிறார். அவர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமாக அறியப்படும் ராம் சிங், நடிகர் புரோசன்ஜித் சாட்டர்ஜியின் பாதுகாவலராக இருக்கிறார். அவர் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் சம்பாதிக்கிறார்.