'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அணைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இயக்குனராக மாறியுள்ளார் அட்லீ.
Image credits: our own
ஷாருக்கான்:
கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷாருக்கான் நடித்தது மட்டும் இன்றி இப்படத்தை தன்னுடைய ரெட் சில்லி என்டர்டெயின்மென்ட் மூலம் பிரமாண்டமாக தயாரித்திருந்தார்
Image credits: our own
நயன்தாரா பாலிவுட் என்ட்ரி:
மேலும் சென்டிமெண்டாக இந்த படத்தில், அட்லீ தன்னுடைய முதல் பட ஹீரோயினான நடிகை நயன்தாராவையும் நடிக்க வைத்தார். இதன் மூலம் நயன்தாராவுக்கு இதுவே முதல் பாலிவுட் படமாக மாறியது.
Image credits: our own
அனிருத் மிரட்டல் இசை:
கூடவே தன்னுடைய ஆஸ்த்தான இசையமைப்பாளரையும் அழைத்து சென்று பாலிவுட் படத்திற்கு இசையமைக்க வைத்தார். ஜவான் வெற்றியால் தற்போது அனிருத் பாலிவுட்டில் படு பேமஸ் ஆகிவிட்டார்.
Image credits: our own
தாதா சாஹேப் பால்கே விருது:
சமீபத்தில் கூட ஜவான் திரைப்படம் தாதா சாஹேப் பால்கே விருதை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என நான்கு விருதை ஜவான் தட்டி சென்றது.
Image credits: our own
தயாரிப்பாளர் அவதாரம்:
இயக்கத்தை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அட்லீ. அந்த வகையில், தெறி படத்தின் ரீமேக்கை அட்லீ தயாரிக்கிறார்.
Image credits: our own
அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படம்:
இப்படத்தின் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அட்லீ அடுத்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணியில் பிசியாக உள்ளார்.
Image credits: our own
அட்லீ - பிரியா அட்லீ ஏர்போர்ட் போட்டோஸ்:
இந்நிலையில், இயக்குனர் அட்லீ, மும்பையில் இருந்து சென்னை கிளம்பி உள்ளதாக தெரிகிறது. மும்பை ஏர்போட்டில் எடுக்கப்பட்ட இவர்களது போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.