தூம் பட 4-ஆம் பாகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு ஸ்வீட் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் 'தூம் 4' படத்தின் வில்லனைப் பற்றியது.
'தூம் 4' வில்லன்?
'தூம் 4' படத்தின் வில்லன் இந்த முறை கோலிவுட் திரையுலகில் இருந்து களமிறங்குகிறார். தூம் 4 படத்தில் நடிகர் சூர்யா வில்லனாக நடிப்பது கிட்ட தட்ட உறுதி என கூறப்படுகிறது.
சூர்யாவின் இரண்டாவது இந்தி படம்
'தூம் 4' படத்தைப் பற்றிய செய்தி உண்மையாக இருந்தால், இது சூர்யாவின் இரண்டாவது இந்தி படமாக இருக்கும். ஏற்கனவே அவர் ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.
'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா
அக்ஷய் குமார் நடித்த 'சூரரைப் போற்று' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யாநடித்திருந்தார். இருப்பினும், அவரது முழு நீள பாலிவுட் அறிமுகம் இன்னும் வரவில்லை.
தூம் பட வரிசையில் மூன்று படங்களும்
'தூம்' பட வரிசையில் இதுவரை 2004, 2006 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
சூர்யாவின் அடுத்த படம்
சூர்யா அடுத்து 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 10, 2024 அன்று பான் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக உள்ளது.