Career

இலவச டேட்டா சயின்ஸ் படிப்புகள்

டேட்டா சயின்ஸ் படிப்புகள்

டேட்டா சயின்ஸ் வேகமாக வளர்ந்து துறையாக மாறியுள்ளது. இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் 8 சிறந்த இலவச ஆன்லைன் படிப்புகளில் சேரலாம்.

ஐபிஎம் டேட்டா சயின்ஸ் படிப்பு

IBM பைதான், SQL, தரவு பகுப்பாய்வு, காட்சிப்படுத்தல், இயந்திர கற்றல் அடிப்படைகள் பற்றிக் கற்பிக்கிறது. தொடக்கநிலையினருக்கு ஏற்றது. சான்றிதழும் கிடைக்கும்.

டேட்டா சயின்ஸ் அறிமுகம்

மைக்ரோசாப்ட் ஆன்லைன் படிப்பில் தரவு காட்சிப்படுத்தல், இயந்திர கற்றல், பைதான் நிரலாக்கம் ஆகியவற்றைக் கற்கலாம். இதுவும் அடிப்படைகளைக் கற்க ஏற்ற படிப்பு.

டேட்டா சயின்ஸ் - அடிப்படை

Kaggle நிறுவனம் பைதான் நிரலாக்கத்தின் அடிப்படைகள், தரவு பகுப்பாய்வு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. நடைமுறை அனுபவத்தை வழங்கும் படிப்பு இது.

டேட்டா சயின்ஸ் முக்கியத்துவம்

மைக்ரோசாப்ட் டேட்டா சயின்ஸ் பைதான், இயந்திர கற்றல் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களைக் கற்பிக்கும் குறுகிய காலப் படிப்பு.

ஹார்வர்ட் டேட்டா சயின்ஸ்

R நிரலாக்கத்தின் அடிப்படைகள், தரவு செயலாக்கம் மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படைகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம்  கற்பிக்கிறது.

பைதான் - டேட்டா சயின்ஸ்

DataCamp பைதான், பாண்டாக்களுடன் தரவு மேலாண்மை, தரவு காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு. கோடிங் பயிற்சியுடன் டேட்டா சயின்ஸைக் கற்றுகொள்ள உதவும்.

இயந்திர கற்றல்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பில் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றி புகழ்பெற்ற AI நிபுணரான ஆண்ட்ரூ எங் கற்பிக்கிறார்.

நிகழ்தகவு மற்றும் தரவு

டியூக் பல்கலைக்கழகம் புள்ளியியல், நிகழ்தகவு கோட்பாடு, தரவு பகுப்பாய்வு ஆகியவை பற்றிய அறிமுகத்தை அளிக்கும் படிப்பு.

Teachers Day 2024: இந்திய கல்வியை மாற்றியமைத்த சிறந்த ஆசிரியர்கள்!

இந்தியாவின் Top 6 மருத்துவக் கல்லூரிகள்

IBPS PO 2024 அறிவிப்பு மற்றும் முக்கிய தகவல்கள்

அதிக சம்பளத்துடன் பெண்களுக்கான 8 சிறந்த வேலைகள் - முயன்று பார்க்கலாமே!