Tamil

லாபம் தரும் 5 பங்குகள்: வாங்க சிறந்த நேரம் இதுவே!

Tamil

1. மாரூதி சுஸுகி பங்கு

மாரூதி சுஸுகி பங்குகளை வாங்க Citi, Jefferies, CLSA ஆகிய பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்து, இந்த மூன்று பங்கின் இலக்கை ரூ.15,500, ரூ.15,200 மற்றும் ரூ.15,000 என நிர்ணயித்துள்ளன.

Tamil

மாரூதி சுஸுகி பங்கு விலை

இந்த வெள்ளிக்கிழமை கடைசி வர்த்தக நாளில் மாரூதி சுஸுகி பங்கின் விலை ரூ.12,697.10 என்ற அளவில் முடிவடைந்தது.

Tamil

2. ஐடிசி பங்கு

ஐடிசி பங்குகளை வாங்க Jefferies, CLSA, JP Morgan ஆகிய பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்து,  இந்த பங்கின் இலக்கை ரூ.585, ரூ.524 மற்றும் ரூ.535 என நிர்ணயித்துள்ளன.

Tamil

ஐடிசி பங்கு விலை

ஆகஸ்ட் 2, 2024 வெள்ளிக்கிழமை முடிவடைந்த வர்த்தக வாரத்தில் ஐடிசி பங்கு ரூ.488.85 என்ற அளவில் முடிவடைந்தது.

Tamil

3. ஐசிஐசிஐ வங்கி பங்கு

ஐசிஐசிஐ வங்கி பங்குகளை வாங்க Citi, Jefferies மற்றும் CLSA ஆகிய பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்து, பங்கின் விலை ரூ.1,464, ரூ.1,460 மற்றும் ரூ.1,500 என நிர்ணயித்துள்ளன.

Tamil

ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை

வெள்ளிக்கிழமை கடைசி வர்த்தக நாளில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு ரூ.1,197.30 என்ற அளவில் முடிவடைந்தது.

Tamil

4. டாடா மோட்டார்ஸ் பங்கு

டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்க Nomura, Jefferies, Macquarie ஆகிய பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்து, பங்கின் விலை ரூ.1,303, ரூ.1,330, ரூ.1,171 என நிர்ணயித்துள்ளன.

Tamil

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை

ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை முடிவடைந்த வர்த்தக வாரத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கு சிறிது சரிவுடன் ரூ.1,095 என்ற அளவில் முடிவடைந்தது.

Tamil

5. ஐஓசிஎல் பங்கு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பங்கின் இலக்கை Citi மற்றும் JP Morgan ஆகிய பங்கு தரகு நிறுவனங்கள் ரூ.205, ரூ.191 என நிர்ணயித்துள்ளன. 

Tamil

குறிப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது இடர்பாடுகளுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான 7 சேமிப்பு யுக்திகள்!!

சரிவிலும் சாதனை: டாப் 10 பங்குகள்

தங்கம் விலையைத் தொடர்ந்து ரூ.6000 விலை குறைந்த ஐபோன்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடா! முதலில் இதை கவனியுங்கள்!