Auto
ஒரு கிமீ பயணம் செய்ய வெறும் 17 பைசா மட்டும் செலவாகும் வகையில் புதிய Nemo E Scooter இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Wardwizard Innovations and Mobility Limited இந்திய சந்தையில் ‘Nemo’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nemo நகர்ப்புற சாலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.
72V, 40Ah பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கிமீ (Eco முறையில்) செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க கி.மீ.க்கு 17 பைசா மட்டுமே செலவாகும் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கூட்டர் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி யூனிட் மற்றும் 5 இன்ச் முழு வண்ண TFT டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
மொபைலை சார்ஜ் செய்ய USB போர்ட் ஒன்றும் உள்ளது. வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து ஸ்கூட்டரை வெளியே எடுப்பதற்கு ரிவர்ஸ் அசிஸ்ட்டும் உள்ளது.
இதன் அறிமுக விலை ரூ.99,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்காலத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகரிக்கலாம்.