அரசு விழாவில் பங்கேற்க தென்காசிக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்… எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து பயணம்!
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தென்காசிக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தென்காசிக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். தென்காசியில் இன்று (அக.08) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு... பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!
இன்று காலை 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் அவர், காலை 10 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் வேல்ஸ் பள்ளி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு 1,03,000 பயனாளிகளுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதன்முறையாக தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் அவர், தென்காசிக்கு ரயிலில் செல்வது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவுக்காக 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதோடு சுமா 20,000 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.