மணப்பாறை அருகே தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மணப்பாறை அருகே தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட வண்டிகள் தீயை அணைக்க கடும் போராடி வருகின்றன. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

First Published Oct 28, 2022, 1:07 PM IST | Last Updated Oct 28, 2022, 1:07 PM IST

திருச்சி மாவட்டம்,  மணப்பாறையை அடுத்த அதிகாரம் அருகே துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு சொந்தமான தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகப் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் மஞ்சு குவித்து வைக்கப்பட்டு இருந்தது.  தேங்காய் நாரின் ஒரு பகுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தேங்காய் மட்டைகள் நன்றாக  காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே நிறுவனத்தில் இருந்தவர்கள் இதுபற்றி துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

அமைச்சரிடம் கெட்ட வார்த்தையில் திட்டும் வாங்கும் காவல்துறை; திருச்சி பாஜக சாடல்!!

தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ அதிக அளவில் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மணப்பாறை, பொன்னமராவதி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு தீயணைப்பு வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. 15 க்கும் மேற்பட்ட தனியார்  தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் தீ பரவிடாமல் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பணி நீடித்து வருகிறது. தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி  அம்பிகா தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் தீயில் எரிந்து சாம்பலாயின. 

சாலையில் கேட்பாரற்று இருந்த கார் மற்றும் பைக்குகள்… காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை!!